Wednesday, 4 April 2018

         ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு
ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி
VDA 01/04/2018 முதல் கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.
UNSKILLED
A பிரிவு நகரம் – ரூ. 17= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.536லிருந்து ரூ.553/= ஆக உயர்வு.
B பிரிவு நகரம் – ரூ. 14= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.448/=லிருந்து ரூ.462/= ஆக உயர்வு.
C பிரிவு நகரம் – ரூ. 11= நாளொன்றுக்கு உயர்வு
ரூ.359/=லிருந்து ரூ.370/= ஆக உயர்வு.
01/04/2018 முதல்
UNSKILLED நாள் கூலி
A பிரிவு நகரம் ரூ.553/=
B பிரிவு நகரம் ரூ.462/=
C பிரிவு நகரம் ரூ.370/=
SEMI SKILLED நாள் கூலி
A பிரிவு நகரம் ரூ.612/=
B பிரிவு நகரம் ரூ.522/=
C பிரிவு நகரம் ரூ.433/=
SKILLED நாள் கூலி
A பிரிவு நகரம் ரூ.673/=
B பிரிவு நகரம் ரூ.612/=
C பிரிவு நகரம் ரூ.522/=
திறனுக்கேற்ற கூலி வழங்க வேண்டும் என நாம் தொடர்ந்து குரல் கொடுத்தும் கூட நமது நியாயமான கோரிக்கை இன்னும் அமுல்படுத்தப்படவில்லை.
அனைவரையும் UNSKILLED என்று சொல்லி மாதம் இரண்டாயிரம் மூவாயிரம் அளவிற்கு அடிமட்ட ஊழியரின் வருவாயில் மண் அள்ளிப்போடும் கொடுமை இன்னும் இங்கே தொடரத்தான் செய்கின்றது.

Saturday, 3 March 2018

NFTCL போராட்டத்தால் போர்க்களமான தமிழ் மாநில CGM அலுவலகம். லீவ் கிடையாது, நடவடிக்கை எடுப்போம் போன்ற அச்சுறுத்தலை துச்சமென புறந்தள்ளி தமிழகமெங்குமிருந்து திரண்டது போர்ப்படை
 ஆட்குறைப்பு செய்யாதே!
மாதாமாதம் 7ந்தேதிக்குள் சம்பளம் வழங்கு

ஆகிய கோரிக்கைகள் விண்ணைப் பிளந்தன.

Monday, 22 January 2018தொழிலாளர் நல அமைச்சர் திரு.கங்குவார் அவர்களிடம் 
தோழர்கள்.மதிவாணன்  - ஆசிக் அகமது ஆகியோர் 
கோரிக்கை மனு அளிக்கும் காட்சி
அடிமட்ட மக்களுக்கு செய்யும் தொண்டே
ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்றார் சுவாமி விவேகானந்தர்...

அந்த வழியில்
அடிமட்ட ஊழியர்களாகிய ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வில்
அல்லல் அகற்றிஆதங்கம் போக்கி…. இன்னல் நீக்கி
அமைதி வழியில் அவர்களது  வாழ்வில் ஒளியேற்றும் பணியில்
அல்லும் பகலும் தன்னை
அர்ப்பணித்துக் கொண்டு வருகிறதுவளருகிறது… NFTCL பேரியக்கம்

அல்லல்படும் ஒப்பந்த ஊழியர்களின் ஓயாத பிரச்சினைகளை
அகில இந்தியத்தலைவர் தோழர்.ஆசிக் அகமது அவர்களும்
அகில இந்தியப் பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்களும்

அன்புள்ளம் கொண்ட தொழிலாளர் நல 
அமைச்சர் திரு.கங்குவார் அவர்களிடமும்...
முதன்மைத்தொழிலாளர் ஆணையர்
திரு.அனில்குமார் நாயக் அவர்களிடமும்
19/01/2018 அன்று தலைநகர் டெல்லியில் சந்தித்து
விரிவாக எடுத்துரைத்துள்ளனர்

உரிய தேதியில் சம்பளம் இல்லை
உழைப்புக்கேற்ற ஊதிய இல்லை
அடையாள அட்டை இல்லை
ஆண்டுதோறும்  போனஸ் இல்லை
மருத்துவ வசதி இல்லை
மரித்து விட்டால் இழப்பீடில்லை
வாரத்தில் ஓய்வில்லை….
வைப்புநிதியில் நிறைவில்லை….
மொத்தத்தில் மனிதநேயம் என்பதே  BSNLலில் இல்லை
என்பதை நமது தலைவர்கள் நேர்பட எடுத்துரைத்து
எழுத்துப்பூர்வ கடிதமும் கொடுத்துள்ளனர்….

அதோடு நில்லாமல்
மூன்று மாத சம்பளம் இல்லாமல் தன்
மூச்சை நிறுத்திக்கொண்டான் ஒரு தோழன் என
தமிழகத்தின் கடைக்கோடியில்….நடந்த கொடுமையை
அமைச்சரிடம்...ஆணையரிடம் எடுத்துரைத்துள்ளனர்….

ஆவண செய்வதாக அமைச்சரும்
ஆணையரும் உறுதி அளித்துள்ளனர்….

அமைச்சரைச் சந்தித்து 
நிரந்தர ஊழியர்களின் பிரச்சினையை...
எடுத்து இயம்ப இயலாத இந்நேரத்தில்

அடிமட்ட ஊழியர்களின் பிரச்சினைக்காக..
அமைச்சரைச் சந்தித்து குறைகளை எடுத்துக்கூறியது
அடிமட்ட ஊழியர்களின் தொழிற்சங்க வரலாற்றில் 
அற்புதம் மிகுந்த செயலாகும்...

எனவேதான்...
NFTCL பேரியக்கம்...
நாடு முழுக்க வளருகின்றது
நாள் முழுக்க வளருகின்றது

இதோ வங்கத்திலும் வளர ஆரம்பித்துள்ளது
மூவாயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள்..
NFTCL இயக்கத்தில் இணைந்திட இசைந்துள்ளனர்….
வங்கத்தில் விரைவில் வலுவான இயக்கம் துவங்கப்படும்….

அடிமட்ட ஊழியர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய
அருமைத்தலைவர்கள் குப்தாசந்திரசேகர்ஜெகன் வழியில்
அனுதினமும்...
NFTCL நடைபோடும்நலம் சேர்க்கும்
வாழ்க NFTCL… வளர்க NFTCL…